காவல்துறையினர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ; பாஜகவை கண்டித்து, வரும் 31-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு…..

கரூரில் காவல்துறையினர் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து, வரும் 31-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து, வரும் 31-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

பேனர், கட் அவுட் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறுவது எந்த வகையில் நியாயம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *