கார்டூனிஸ்ட் பாலாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

கார்டூனிஸ்ட் பாலாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தீயிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதை குறிப்பிட்டார். அந்த துயரத்தை காட்ட கேலிச்சித்திர ஓவியர் பாலா தீட்டிய கோட்டோவியம் இலட்சக்கணக்கான மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்ததாக அவர் தெரிவித்தார். மேலும் ஓவியர் பாலாவின் கோட்டோவியம் ஆபாசமானது என்றால், இசக்கிமுத்து அவரது மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகள் தீயில் உடல்கள் வெந்து நிர்வாணமாய் வீழ்ந்து கிடந்தது ஆபாசமில்லையா? என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஓவியர் பாலாவை கைது செய்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், பாலாவை உடனடியாக விடுவிக்க என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *