சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இயங்கி வரும் தமிழ்நாடு கெமிக்கல் எனும் தனியார் ரசாயன ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்குடி அருகே கோவிலூரில் இயங்கி வரும் தமிழ்நாடு கெமிக்கல் என்ற ரசாயன ஆலைக் கழிவுகளால் பல்வேறு வியாதிகள் ஏற்படுவதுடன், விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆலையை மூடக் கோரி அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், தற்போது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களின் ஆதரவோடு ஆலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 2 ஏ.டி.எஸ்.பி.க்கள், 13 டி.எஸ்.பி.க்கள், 50 காவல் ஆய்வாளர்கள் என ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

