கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை மற்றும் ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஷிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ராம்நகரம் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பகல் 12 மணிக்குள் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் 3 மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

