கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே தனியார் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரம், கனகனமாரடி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கால்வாயில் கவிழ்த்தது. இந்த பேருந்தில் மொத்தம் 35 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தார்.