கடலூர் மாவட்ட இளைஞர் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் ப.மா.க நிறுவனர் ராமதாஸ்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு;

கடலூரில் நிகழ்ந்த இளைஞரின் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருப்பது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள சாத்தம்பட்டு குக்கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். சேர்ந்த அவர் கடந்த மாதம் மணல் குவாரி வழக்கில் சிறை சென்று, திரும்பியுள்ளார். இந்நிலையில், சாத்தம்பட்டு பேருந்து நிலையத்தில் நின்று இருந்த ஆனந்தன், அங்கு வந்த வைத்தியநாதன், என்ற இளைஞருடன் தகராறு செய்துள்ளார்..

மேலும் தாம் சிறைக்கு சென்று திரும்பி விட்டதாகவும், இப்போது உங்களால் என்ன செய்ய முடியும் என்று இழிவாக பேசி அடிதடியில் இறங்கியுள்ளார். இதற்கு பின்னர் வைத்தியநாதன் பேருந்திலேறி சென்றுள்ளார். . இச்சம்பவத்தை தேனீர் கடை ஒன்றில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த சிலர் ஆனந்தனை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலடைந்த ஆனந்தன், அருகிலுள்ள் உறவினர் வீட்டிலிருந்து மண்ணெண்ணையை எடுத்து வந்து, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது .

இந்த நிலையில் ஆனந்தன் மரண வாக்குமூலம் அளித்ததாக வீடியோ பதிவு ஒன்று வெளியாகி உள்ளது . இதனடிப்படையில் சாத்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த, சிலம்பரசன், புதுராசா சுப்பிரமணியன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரே மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனந்தன் தற்கொலையை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் காவல் துறைக்கு உண்மை தகவலை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் கிராம நிர்வாக அலுவலர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே வைத்தியநாதனை காதலித்த இளம்பெண்ணை ஆனந்தன் ஒருதலையாக காதலித்ததாகவும், தான் காதலித்த பெண் தன்னை விட்டுவிட்டு வைத்தியநாதனை காதலிக்கிறாரே என்ற மன உளைச்சலிலும், ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குறித்த உண்மை தகவல்களை, போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலை இவ்வாறிருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, களங்கம் ஏற்படுத்தும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கை வன்முறையை தூண்டும் விதமாக அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் கடலூர் மாவட்ட இளைஞர் தற்கொலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரின் அவதூறு அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *