கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வுசெய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்பி வைப்பதாக, பிரதமர் உறுதியளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்புகளை முழுமையாக தெரிந்து கொள்ளவே ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக மத்திய அரசு ஆயிரத்து 500 கோடி ரூபாயும், நிரந்தர சீரமைப்பு பணிக்காக 15 ஆயிரம் கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் அவர் விரிவாக விளக்கினார்.

