கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து 650 படகுகளில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இயந்திர படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை திரும்பி செல்லும்படி கற்களை வீசி விரட்டி அடித்துள்ளனர். மேலும், மீனவர்களுக்கு சொந்தமான 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

