சென்னையில் இருந்து புறப்பட்ட விரைவு ரயிலில் சமையல் மாஸ்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இன்று காலை சென்னையில் இருந்து கோவையை நோக்கி விரைவு ரயில் புறப்பட்டது. இதில், பயணிகளுக்கு உணவு தயார் செய்துக் கொண்டிருந்த வேலூரைச் சேர்ந்த முருகன் என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை ரயிலில் பயணித்த மருத்துவர் பரிசோதனை செய்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அரக்கோணத்தில் ரயில் நின்றவுடன் முருகனின் உடல் பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

