இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சந்தீப் பட்டீல், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை விராட் கோலி தான் சிறப்பான வீரர் என்றும், ஆனால் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கோலியைக் காட்டிலும் ரோகித் சர்மா முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ளார். தம்முடைய கருத்து, கோலியின் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்காது என்று கூறிய அவர், வீரர் என்ற முறையிலும், கேப்டனாகவும், தாம் ஒரு சிறப்பான வீரர் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்து விட்டதாகவும் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.
2017-12-27

