எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், அதிமுக கொறடா ராஜேந்திரனும், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து, உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, 18 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த, அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால், இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சபாநாயகர் தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அதிமுக கொறடா ராஜேந்திரனும், தமது தரப்பு வாதங்களை கேட்காமல், எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில், கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

