உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் மலைப்பகுதிகள் வெள்ளித்தகட்டால் மூடியது போல் காட்சியளிக்கின்றன.
நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.
இதனால் மரங்கள் மீதும், வீடுகள், கட்டடங்களின் கூரைகளின் மீதும் பனி உறைந்துள்ளது. மலைமுடிகளில் பனி உறைந்துள்ளதால் அவை வெள்ளித்தகட்டால் மூடியதுபோல் காணப்படுகின்றன.
கேதார்நாத் கோவில் முழுவதும் பனிமூடிக் காணப்படுகிறது. சிம்லா மாவட்டத்தில் குப்ரி என்னுமிடத்தில் கடும் பனிப்பொழிவால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

