டெல்லியில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் அதிவேகத்தில் காரை இயக்கி, வேறொரு கார் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். அவரது மகளுக்கு கண் பார்வை பறிபோனது. மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாஃக் என்ற இடத்தில் நேற்று விபத்து நிகழ்ந்துள்ளது.
பூர்ணம் சர்தானா என்பவர் தனது குடும்பத்துடன் ஆதர்ஷ் நகர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை நடுவே உள்ள தடுப்பைத் தாண்டி தறிகெட்டு ஓடிய கார், இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் பூர்ணம் சர்தானா உயிரிழந்தார். அவரது 13 வயது மகளுக்கு கண் பார்வை பறிபோனது. தாயின் கருவிழி மகளுக்கு பொருத்தப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். இவர் குடிபோதையில் காரை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என போலீசார் கூறியுள்ளனர்.

