இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பா.ஜ.க 44 தொகுதிகளை வென்றாலும், முதலமைச்சர் வேட்பாளர் பிரேம்குமார் துமால் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஜெய்ராம் தாக்கூர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

