இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்…..

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்கிறார்.

இமாச்சலப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சராக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தோல்வி அடைந்தார். இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சிம்லா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சிம்லா நகரில் உள்ள ரிட்ஜே திடலில் ஜெய்ராம் தாக்கூர் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *