தமிழ் வார இதழில் கட்டுரை எழுதிவரும் நடிகர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று கூற முடியாது என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்துக்களை தவறாகவும், மனதை புண்படுத்தும் வகையிலும் கருத்து தெரிவித்த கமல்ஹாசனையும், அவரது ரசிகர்களையும் துப்பாக்கியால் சுட்டோ, தூக்கிலிட்டோ சாகடித்து, பாடம் புகட்ட வேண்டும் என இந்து மகாசபா என்ற அமைப்பின் தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோர் சர்மா தெரிவித்துள்ளார். இந்துக்கள் குறித்தும், அவர்களது நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசுவோர் இந்த மண்ணில் வாழக் கூடாது என்று கூறியுள்ள அவர், கமல்ஹாசன் போன்றோரின் கருத்துக்கு மரணத்தையே திருப்பியளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பண்டிட் அசோர் சர்மாவின் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

