உத்தரப்பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் கரும்புத் தோட்டத்தில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது.
பாக்பத் பகுதியில் கரும்புத் தோட்டம் ஒன்றில் பலத்த சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த விவசாயிகள் சிறிய ரக விமானம் ஒன்றின் முன் பகுதி தரையில் மோதி, இடதுபுற இறக்கையின் பிடிமானத்தில் நின்றது. விமானி பத்திரமாக வெளியேறிய நிலையில் சம்பவ இடத்துக்கு போலீசார், அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

