இந்தியா 1,398 உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளின் கடனை அடைக்கும் அமிதாப் பச்சன்

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளின் கடனை அடைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன்களை அடைத்த அமிதாப் பச்சன், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் நிதி உதவி செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து 398 விவசாயிகள், வங்கிகளில் பெற்ற கடன்களை அமிதாப் பச்சன் திருப்பிச் செலுத்தவுள்ளார்.

4 கோடியே 5 லட்சம் ரூபாய் கடன் தொகையை இவர் கொடுக்கவுள்ளார்.  70 விவசாயிகளை மும்பை வரவழைத்து வரும் 26ஆம் தேதி அமிதாப் பச்சன் கடன் பொறுப்பேற்புக் கடிதத்தை கடிதங்களை கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *