புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பழவேற்காடு முதல் குளச்சல் வரை அனைத்து படகுகளும் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓக்கி புயல் அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உயிர் சேதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

