மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் பங்குனி திருவிழா இன்று முதல் கொடியேற்றத்துடன் துவங்கியது, இக்கொடியேற்றம் முருகன் சன்னதி முன் அமைந்துள்ள நந்தி வாகனம் கம்பத்தடியில் கொடியேற்றி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை பல்லக்கு முன்பு துவங்கப்பட்டு சாமி குயவர் மண்டபத்திற்கு சென்று பக்தர்களுக்கு சுவாமி எழுந்தருளி தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற திருவிழாவில் பங்கேற்பு. பங்குனி திருவிழா இன்று முதல் 15நாள் 21-03-2018 முதல் 04-04-2018 வரை வெகுவிமர்சையாக நடைபெறஉள்ளது.
2018-03-21

