அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணை; தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தமிழக தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய எஸ்சி-எஸ்டி ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்

திருச்சி மாவட்டத்தில் பஞ்சமி நிலம் மற்றும் இடஒதுக்கீடு முறை உள்ளிட்டவை குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி தேசிய ஆணைய துணை தலைவர் முருகன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *