தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களாக இருந்த ஆய்வக நுட்பனர் பணியிடங்களுக்கு 687 பேர் இன்று முதல் பணியமர்த்தப்பட்டனர். அதற்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றாலும் அங்குள்ள மருத்துவர்கள் தமிழக சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டுவதாகக் கூறினார்.

