அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்தது தமிழக அரசு; C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 3000 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு……..

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசுப் பணிகளில் C மற்றும் D பிரிவைச் சேர்ந்த நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல் சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து செயலாளர்கள், ஆகியோருக்கு 1,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *