அமெரிக்காவில் பிறப்புரிமை சார்ந்த குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வரத் திட்டம் – டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் பிறப்புரிமை சார்ந்த குடியுரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பெற்ற பின் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமையும் அதற்கான சலுகைகளும் வழங்குவது அபத்தமானது என்றும், இந்த முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிறப்பு மேலாண்மைச் சட்டம் மூலம் இதனை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வெள்ளை மாளிகை வழக்கறிஞருடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *