அண்டார்டிகாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அண்டார்டிகாவில் 7 புள்ளி 1 என்ற ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்டார்டிகாவின் வட பகுதியில் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள சான்ட்விஜ் தீவுகளுக்கு அருகே இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பூமிக்கு அடியில் சுமார் 165 கிலோ மீட்டர் ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. மேலும், நிலநடுக்கத்தின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கமாக விடுக்கப்படும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *