அடுத்த 48 மணிநேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் அதாவது 29-ந்தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோரம் வரை பரவியுள்ளதாகவும், இது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை என்பதால் இன்னும் 4 நாளில் பருவமழைக்கான அறிகுறி தொடங்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

