அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி போட்டியிட விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது.

ரஷியா நாட்டின் பிரதமர் விளாடிமிர் புதினின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி போட்டியிட முடிவு செய்து இருந்தார். இந்நிலையில் அலெக்சி நவால்னி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் போட்டியிட ரஷியா தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அலெக்சி நவால்னி மீதான தடையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் நவால்னி போட்டியிட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *