அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம், சீனாவின் தேடு பொறியான பைடு உடன் இணைந்து தானியங்கி கார் திட்டத்தை மேற்கொள்கிறது.
தானியங்கிக் கார் தயாரிப்பில் ஈடுபட உலகின் சில முன்னணி கார் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அந்த வரிசையில், டெய்ம்லர் ஏ.ஜி. வாகன தயாரிப்பு நிறுவனம் தங்களது தானியங்கி வாகனங்களை பரிசோதிக்க சீனாவில் ஜூலை மாதம் அனுமதி பெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனமும், சீன சர்ச் எஞ்சினான பைடுவுடன் இணைந்து, இரண்டாண்டு தானியங்கி கார் தயாரிப்பு பரிசோதனைத் திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது. ஓட்டுநரின் செயல்பாடு இன்றி வழிநடத்தும் தொழில்நுட்பத்தின்படி, தானியங்கி கார் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

