முறையாக சட்டப்படிப்பு பயிலாத 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை; தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி…..

முறையாக சட்டப்படிப்பு பயிலாத 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் மூலம், சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளவர்களை நீக்குவது குறித்து பார் கவுன்சில் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கண்டறியப்பட்ட 742 பேர் வழக்கறிஞர் பணி செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. பார் கவுன்சிலில் இருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்று விளக்கமளிக்கும் படியும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக அகில இந்திய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என ஆயிரத்து 25 வழக்கறிஞர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *