கஜா புயல் பாதித்த பகுதிகளில் தற்போது வரை 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 38 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கஜா புயல் பாதித்த பகுதிகளில் மழை பெய்தாலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படாது என தெரிவித்தார்.

