மதவாத ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் பட விவகாரத்தில் கருத்து தெரிவித்த எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவனை காழ்புணர்ச்சியுடன் விமர்சித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து அமைதி வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கரூர் மற்றும் மயிலாடுதுரையில் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை எரித்து ரகளை ஈடுபட்டனர்.
இதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தோழமை கட்சிகளின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த பிரம்மாண்ட போராட்டத்தில் தோழமை கட்சிகளான திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், ஆதிக்க சக்திகளின் வெறுப்பு அரசியலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், பாசிச வாதிகளை எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

