மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறையும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போட மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் விமான நிலையங்களை குறிவைத்து நடைபெற்ற தனி மனித தாக்குதல்களை சுட்டிக்காட்டி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறது.
2017-12-28

