தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும் வங்காளதேசமும் இணைந்து செயலாற்றும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இருநாள் அரசுமுறைப் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். வங்கதேசத்தில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டு உறவுகள் மேம்பாடு தொடர்பாக ஷேக் ஹசீனாவுடன் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை, பயங்கரவாதத்தையும் எதிர்க்க இந்தியா உறுதியுடன் இருக்கிறது என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக மற்ற நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து போராட உள்ளதாகவும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும் வங்காளதேசமும் இணைந்து செயலாற்றும் என்றும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

