சென்னை ஆர். கே. நகர் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி, குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் தண்டையார்பேட்டை இரட்டைக்குழி வீதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு டிடிவி தினகரன் முதல்முறையாக சென்றார். அப்போது, தினகரனின் ஆதரவாளர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் குரல் எழுப்பப் போவதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *