ஈரானில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணைய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் சீன நாட்டு கடல் எல்லையில் வேறொரு சரக்கு கப்பலின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஈரான் நாட்டில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று பெட்ரோலிய கச்சா எண்ணையை ஏற்றிகொண்டு தென் கொரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பல் ஷாங்காயில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலவில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருந்து உணவு தாணியங்களை ஏற்றிவந்த ஹாங்காங் சரக்கு கப்பலின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஈரான் நாட்டு எண்ணைய் கப்பல் தீபிடித்து எரிய தொடங்கியது. இதனைதொடர்ந்து ஈரான் கப்பலில் பயணித்த 32 பேரை தேடும் பணிக்காக சீனாவில் இருந்து 8 கப்பல்களும், தென்கொரியாவில் இருந்து ஒரு விமானம் மற்றும் கடலோர காவல்படை கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *