ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது; கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி…..

ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக அரசு மீது தவறு கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் திட்டமிட்டு வீண் பழி சுமத்துவதாக குற்றம் சாட்டினார். வெல்லம் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படும் என்பதால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரை கொடுக்கவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து சிந்திக்க முடியும் என்று கூறிய அவர், ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *